கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக இருவர் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்கள் இருவரும் ஆண்களே. இதில் ஒருவர் வடமராட்சியையும் இன்னொருவர் கோப்பாய் பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment