உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் முக்கிய 8 புள்ளிகளிடம் அதிரடி விசாரணை - Yarl Voice உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் முக்கிய 8 புள்ளிகளிடம் அதிரடி விசாரணை - Yarl Voice

உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல் தொடர்பில் முக்கிய 8 புள்ளிகளிடம் அதிரடி விசாரணை

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட பிரிவிற்கு பொறுப்பாக இருந்த 8 பொறுப்பதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் ஐ.எஸ்.யூ என்கிற விசேட விசாரணைப் பரிவு அமைந்துள்ள 4ஆம் மாடியில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தீவிர வாத தாக்குதல் குறித்து கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் தான் நநடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலையே அந்த விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வுப் பரிவின் முக்கிய அதிகாரிகள் மீது தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post