கொரோனோ வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ஒரு மாதத்திற்கு மேலாக அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் தளர்த்துவதா இல்லையா என்கிற முடிவு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிற நிலையில் ஊடுரங்கைத் தளர்த்துவதா இல்லை என ஆராய்ந்து வருகின்ற அரசாங்கம் இன்று அல்லது நாளை இது தொடர்பான அறிவித்தலை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இலர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
அதே நேரம் ஏஐனய 19 மாவட்டங்களிலும் சில மணி நேரங்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வருகிறது. இந் நிலையில் தொடர்ந்தும் எந்தெந்தப் பிரதேசங்களில் ஊடரங்குச் சட்டத்தை தளர்த்துவதா இல்லை என அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
ஆகையினால் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு சில தினங்கள் அரசாங்கம் உத்தியோகபுர்வமாக அறிவித்தலை விடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment