பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிறுவனம் யாழில் உதவி - Yarl Voice பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிறுவனம் யாழில் உதவி - Yarl Voice

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிறுவனம் யாழில் உதவி

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஊடங்குச்சட்டத்தால் முடக்கப்பட்ட மக்களுக்கு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிறுவனம் உதவி வழங்கி வைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஊரடங்குச்சட்டம்  பிறப்பிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தற்போது வரை அமுலில் இருந்து வருகின்றது.

இதன் காரணமாக யாழ்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக அன்றாடம் தினக்கூலி பெற்று தமது அன்றாட வாழ்வைக்கழிக்கின்ற மக்கள் இதனால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் முகமாக சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான எமது நிறுவனம்  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள அரியாலை கிராம மக்களுக்காக 1500 ரூபா பெறுமதியான 100 பொதிகள் யாழ் மாவட்ட செயலகத்தில் 27.03.2020 அன்று கையளிக்கப்பட்டு அவர்களுக்கூடாக அரியாலை மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட து j 134  135  136 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய நவாலி, களவோடை கிராமங்களைச் சேர்ந்த அன்றாடம் உழைத்து தினக்கூலி பெற்று தமது நாளாந்த வாழ்வைக் கழித்துக் கொண்டிருந்த சமூர்த்தி நிவாரணம் பெற முடியாத வறுமைக் கோட்டில் வாழ்கின்ற ஏழை மக்கள் மற்றும் இதுவரையில் எவ்விதமான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளாத 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1500 ரூபா பெறுமதியான நாளாந்த சமையலுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி  வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தீவகப்பகுதியும் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட கிராமங்களை இனங்கண்டு அவர்களுக்கான உலர் உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளன.



0/Post a Comment/Comments

Previous Post Next Post