வடக்கு மாகாணத்தின் கடல்பகுதி ஊடாக இந்தியாவில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஊடுருவுவோரை கட்டுப்படுத்துவதற்காக வடக்கு மாகாணத்திற்கு மேலதிக கடற்படையினரும் விமானப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடற்படையினருக்கு யாழ்ப்பாணம் மாதகல் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இரு பாடசாலைகளும் விமானப் படையினருக்கு ஓர் பாடசாலையும் அந்த அந்த மாவட்டச் செயலாளர்களின் சிபார்சின் அடிப்படையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முகிம் அமைக்கும் படையினரில் மாதகலில் முகாம் அமைக்கும் கடற்படையினர் இய்தியாவில் தற்போது கொரோனா அச்சம் அதிகரிக்கும் நிலையில் ஊடரங்குச் சட்டம் தொடருமானால் இலங்கைக்கு அதிகளவானோர் தப்பி வரக் கூடும் எனக் கருதியும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏனைய மாகாணத்தில் இருந்து ஊடுருவினால் கண்டறியும் வகையிலும் விசேட நடவடிக்கையில் ஈடுபடவதற்காகவே அமைக்கப்படுவதாக செட்டிக்காட்டப்படுகின்றது.-
Post a Comment