விவசாயிகளைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice விவசாயிகளைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - குகதாஸ் வலியுறுத்து - Yarl Voice

விவசாயிகளைக் காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - குகதாஸ் வலியுறுத்து


யாழ் மாவட்ட விவசாய உற்பத்திகள் வெளிமாவட்டங்கள் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 வீதமான மக்கள் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வாழ்கின்றனர் கடந்த மார்கழி மாதம் உருவாக்கிய புதிய மரக்கறிப் பயிர்கள் வளர்ந்து அறுவடை தருவது பங்குனி,சித்திரை,வைகாசி,ஆனி மாதங்களில் தான்.

ஆனால் கொவிட் 19 காரணமாக உற்பத்தி விளைவுகள் அதிகம் கிடைக்கும் நேரத்தில் சந்தை வாய்ப்புக்கள் இன்றி மூதலிடுகளையும் இழந்து அவல நிலைக்குள் விவசாயிகளின் குடும்பங்கள் சிக்கி தவிக்கின்றனர்.

இங்கு பல இடங்களில் மூட்டை மூட்டையாக மரக்கறிகள் பழுதடைந்து தூர் நாற்றம் வீசுகின்றன. வெளிமாவட்ட சந்தை வாய்ப்புக்கள் இல்லாமையால் விவசாயிகள் வருமானத்தை பெறுகின்ற நேரத்தில் தங்களது சொந்த முதல்களையே இழந்துள்ளனர.

குறிப்பாக கடன்களை பெற்ற நிலையில் முதலீடு செய்தவர்கள் மேலும் கடனாளிகளாக உள்ளாகியுள்ளனர். இவ்வாறு பல்வேறு பாதிப்புக்களை தொடர்ச்சியாக அவர்கள் நாளாந்தம் எதிர்நோக்கி கொண்டு வருகின்றனர்.

ஆகவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான பாதுகாப்பான ஒழுங்குகளை உடனடியாக விரைந்து எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் ஐனாதிபதி உடன் தiலிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post