கொரோனோ ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பணிப்பாளர் வலியுறுத்து - Yarl Voice கொரோனோ ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பணிப்பாளர் வலியுறுத்து - Yarl Voice

கொரோனோ ஆபத்தை உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பணிப்பாளர் வலியுறுத்து

உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொண்டு சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்குமாறு பொது மக்களைக் கேட்டுள்ள யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இந்த அபாய காலப் பகுதியில் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தற்போது குறிப்பிட்டளவு கட்டப்பாட்டில் இருந்தாலும் எதிர்காலத்தில் எப்படி என்று கூற முடியாது.; ஆகையினால் பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதே நேரம் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக இந்தக் காலப் பகுதியில் சுகதேசிகளாக அனைவரும் இருக்க வேண்டும.; நலிவடைந்தவர்கள் வயோதிபர்கள் மேலும் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருந்தை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரதும் தேக உடல் ஆரோக்கியம் மிக முக்கியம்.

உலகலாவிய ரீதியில் இந்த வைரஸ் நோயை முற்றாக ஒழிக்கும் வரை அனைவரும் இவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இங்கு சில பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணிக்கக் கூடிய நிலைமை காணப்படுகிறது.

ஆகையினர்ல எவ்வாறாயினும் பொதுவாகவே தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் தொற்று அபாயம் இன்னும் நீங்கி விடவில்லை என்பதால் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post