ஊரடங்கு வேளையில் யாழில் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது - பொருட்களும் மீட்பு - Yarl Voice ஊரடங்கு வேளையில் யாழில் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது - பொருட்களும் மீட்பு - Yarl Voice

ஊரடங்கு வேளையில் யாழில் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது - பொருட்களும் மீட்பு

ஊரடங்கு வேளையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பொலீஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் கடந்த 10ஆம் திகதி சாவகச்சேரி பகுதியில் வயது முதிர்ந்தவர்கள் உள்ள வீட்டுக்குள் புகுந்து அவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டிலிருந்த 5  பவுண்  நகை மற்றும்16ஆயிரம் ரூபா  பணம் நவீனரகதொலைபேசி  திருடிய குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் குற்ற பொலிஸ் பிரிவினரால்மூவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்படுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 9 பவுன் நகைகளும் யாழ்ப்பாணம்  மானிப்பாய்  சாவகச்சேரி  மற்றும் யாழ்ப்பாண நகரில் உள்ள நகைக் கடைகளில்  அடகு வைக்கப்பட்ட நிலையில் 16 பவுன் நகை அடைவு சீட்டுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 குறித்த திருட்டு கும்பல் யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குற்றவாளிகள் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 குறித்த நபர்கள் மானிப்பாய் பளை கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பந்தப்பட்டவர்கள் எனவும் முதல் கட்ட விசாரணைகளில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப் பட்ட பின்னர் நீதிமன்றத்தில் உட்படுத்தப்பட உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post