ஊரடங்கு வேளையில் யாழ் மக்களை அச்சுறுத்திய கொள்ளைக் கும்பல் சிக்கியது - Yarl Voice ஊரடங்கு வேளையில் யாழ் மக்களை அச்சுறுத்திய கொள்ளைக் கும்பல் சிக்கியது - Yarl Voice

ஊரடங்கு வேளையில் யாழ் மக்களை அச்சுறுத்திய கொள்ளைக் கும்பல் சிக்கியது

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 இலட்சம் ரூபா பெறுமதியான களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

 ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புகுந்து அங்கு காணப்பட்ட சிசி கேமரா மின்மோட்டார் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் களவாடப்பட்ட மை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டிருந்தது.

இந் நிலையில் யாழ்ப்பான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் அதிகாரி முனசிங்க தலைமையிலான அணியினர்  நடாத்திய விசாரணையின் போது நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து  அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையின் அடிப்படையில் கடந்தவாரம்  யாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியில் வயது முதிர்ந்த ஒருவர் தனது ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக யாழ்  நகரத்துக்கு வருகை தந்த போது அவரின் வீட்டுக்குள் புகுந்து தொலைபேசி மற்றும் அவருடைய கடன் அட்டை போன்ற பெறுமதியான பொருட்களை திருடியதனடிப்படையில் குற்றச்சாட்டில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 மொத்தமாக களவாடப்பட்ட பொருட்களை விற்பனைசெய்தமை  களவாடப்பட்ட பொருட்களை உடைமையில் வைத்திருந்த அடிப்படையில் மொத்தமாக நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 களவாடப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் ஆஜர்படுத்த உள்ளதாகவும் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முனசிங்க தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post