பொதுத் தேர்தல் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் - வரதராஐப் பெருமாள் வலியுறுத்து - Yarl Voice பொதுத் தேர்தல் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் - வரதராஐப் பெருமாள் வலியுறுத்து - Yarl Voice

பொதுத் தேர்தல் குறித்து இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் - வரதராஐப் பெருமாள் வலியுறுத்து

கொரோனோ நெருக்கடியான நேரத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பில் பல தரப்பினரும் கலந்து பேசி பொதுவான இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமானது என வடக்கு கிழக்கு இணைந்த முன்னாள் மாகாண முதலமைச்சர் வரதராஐப் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்துவதிலும் நெருக்கடி இருக்கிறது. தேர்தல் நடாத்தாமல் விடுவதாலும் நெருக்கடி ஏற்படும். நடாத்தாமல் எப்படி தீர்வு காணுவது என்பது குறித்த எல்லாரும் கலந்துரையாடி தேர்தல் இல்லாமலே இந்த விடயத்திற்கு தீர்வைக் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். ஆனால் அதற்காக சட்டபுர்வமற்ற முறைகளில் அல்லது அரசியல் யாப்புக்களை மீறி அல்லது நிராகரித்த வகைகளில் அவற்றை மேற்கொள்ள முடியாது.

நாட்டின் சட்டங்களையும் கட்சிகளின் அபிபப்பிராயங்களையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல் தான் வழி என்றால் கொரோனோ பாதிப்பு விரிவடைய எந்தச் சந்தர்ப்பமும் கொடுக்காமல் இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தேர்தலை நடாத்த முயற்சிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும்.

ஆயினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியிலும் தேர்தல் நடாத்துவது சந்தேகத்திற்கிடமானது. கொரோனோ சில நாட்களாக விரிவடைந்து வரும் வேகத்தை பார்க்கையில் இன்னும் பல மடங்களாக விரிவடையேமா என்ற அச்சம் உள்ளது. அப்படியான நிலையில் தீர்மானிக்கப்பட்டுள்ள அந்தத் திகதியில் கூட எப்படி நடக்கப்ப போகிறது என்ற கேள்வி இருக்கிறது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமாக இருந்தால் நோய் பாதிப்பு ஏற்படுத்தாமல் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் ஒரு தீர்வு வரப்போவதில்லை. தேர்தலை தள்ளிப் போடுவதால் அரசியல் யாப்பு நெருக்கடி ஏற்படும். பாராளுமன்றத்தைக் கூட்டினாலும் அந்த அரசியல் யாப்பு நெருக்கடி ஏற்படும். இவை எல்லாத்iதுயும் கவனமெடுத்து செயயற்பட வேண்டும்.

இதற்குள் இங்குள்ள எதிர்க்கட்சிகள் தமக்கு ஒரு வேலை வேண்டுமென்பதற்காக வெறுமனே அரசைக் குறை சொல்லி அறிக்கை விடும் சுயநல அரசியல் பொருத்தமில்லாதது. எனவே அரசியல் யாப்பு நெருக்கடியை தீர்ப்பதற்கு தேர்தல் அவசியமானது. ஆனால் அந்த தேர்தலை இந்த நெருக்கடியான காலத்தில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதனை அரசும் அரசியல் கட்சிகளும் இணைந்த தீர்மானிக்க வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post