யாழில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருட்டுக் கும்பல் சிக்கியது - பலரும் கைது பொருட்களும் மீட்பு - Yarl Voice யாழில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருட்டுக் கும்பல் சிக்கியது - பலரும் கைது பொருட்களும் மீட்பு - Yarl Voice

யாழில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருட்டுக் கும்பல் சிக்கியது - பலரும் கைது பொருட்களும் மீட்பு

யாழ்ப்பாணத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த திருட்டுக் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்ளனர்.

யாழ்.நகரப் பகுதிகளில் 10 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை களவெடுத்த திருடர்களையும் திருடிய பொருட்களை வாங்கிய நபர்களையும் யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டிடம் நிர்மாணிக்கும் இடத்தில் இருந்து கட்டிட பொருட்கள் மற்றும்இ ரில்டர் உள்ளிட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடி வி;றபனை செய்தவர்களும்இ யாழ்.நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் திருடி விற்பனை செய்துள்ளார்கள்.

இவ்வாறு 3 இடங்களில் திருடிய இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் இலத்திரனியல் பொருட்கள் என்பன திருடிய யாழ்.நாவாந்துறை மற்றும் பொம்மைவெளி கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த சுமார் 8 பேர் நேற்று (26)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரி எம்.எம்.ஆர்.சி. முனசிங்க மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஹர்சன் ஹபுலியட்ட கவியரசன் ரஞ்சித் கிங்ஸ்லி மற்றும் மரியசிறி உபாலி ரட்ணாயக்க சுரேகா உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும்இ மீட்கப்பட்ட பொருட்களையும்இ யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post