யாழ் பல்கலைக் கழகம் போன்று ஏனைய பல்கலைக் கழகங்களிலும் கொரோனோ பரிசோதனை - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice யாழ் பல்கலைக் கழகம் போன்று ஏனைய பல்கலைக் கழகங்களிலும் கொரோனோ பரிசோதனை - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு - Yarl Voice

யாழ் பல்கலைக் கழகம் போன்று ஏனைய பல்கலைக் கழகங்களிலும் கொரோனோ பரிசோதனை - சுகாதார பணிப்பாளர் அறிவிப்பு

யாழ்ப்பாணம் பல்கலக்கழகம் போனே்று நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலும் கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பேராதனை மற்றும் களனி மற்றும் கொழும்பு ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களிலும் இப் பரிசோதனையை விரைவில் நடாத்த இருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஐயசிங்க தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை காலமும் இலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் மட்டும் கொரோனோ பரிசொதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதே நேரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் யாழில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையிலையே யாழ்ப்பாணம் போன்று ஏனைய பல்கலைக் கழகங்களிலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் நாட்டில் கொரோனோ தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனோ பரிசொதனையை அதிகரிக்கும் நோக்கிலே இப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post