நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பயன்படுத்தி பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்து உள்ளது என தெரிவித்துள்ள மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் வியாபாரிகள் மக்கள் நலன்சார்ந்து செயற்பட வேண்டிய தருணம் இது என்று சுட்டிக் காட்டியுள்ளார்
மாவட்ட செயலகத்தில் இன்று மாலை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டு அதன் காரணமாக ஊரடங்கு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் பாரவூர்திகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன அதிலும் குறிப்பாக மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.
அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவே வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. எனினும் நமது அறிவுறுத்தல்களையும் மீறி சில தனியார் வர்த்தக நிலையங்கள் அதிக விலைக்கே அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன
நாட்டில் தொற்றுநோய் ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் இந்நிலையில் வர்த்தகர்கள் இலாபம் தேடும் முயற்சியிலேயே கவனம் செலுத்துகின்றனர் யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற வர்த்தகர்கள் மக்களின் மனநிலையை புரிந்து மனிதாபிமானம் ஆக செயல்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன் அதிக விலையில் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாவனையாளர் அதிகார சபையினர் களத்தில் இறங்கியுள்ளனர் என்றார்

Post a Comment