யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிப்பு - Yarl Voice யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிப்பு - Yarl Voice

யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி கோகலை புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்  இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரமே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டிஇ கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அலவத்துகொடை அக்குரணை மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த 3 மாவட்டங்களினதும் ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தினமும் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கொட்டாஞ்சேனை கிராண்ட்பாஸ்  பம்பலப்பிட்டி வாழைத்தோட்டம் மருதானை கொத்தட்டுவ முல்லேரியா வெல்லம்பிட்டி கல்கிசை தெஹிவளை மற்றும் கொஹூவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய பொலிஸ் பிரிவுகளில் ஏப்ரல் 22 ஆம் திகதி புதன்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் இரவு 8 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் – மாரவில மற்றும் வென்னப்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் களுத்தறை மாவட்டத்தின் பண்டாரகம பேருவளை பயாகல மற்றும் அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post