யாழில் விவசாயிகளின் கோரிக்கைக்கு உடனடித் தீர்வு - அரச அதிபருக்கு நன்றி கூறிய சுரேந்திரன் - Yarl Voice யாழில் விவசாயிகளின் கோரிக்கைக்கு உடனடித் தீர்வு - அரச அதிபருக்கு நன்றி கூறிய சுரேந்திரன் - Yarl Voice

யாழில் விவசாயிகளின் கோரிக்கைக்கு உடனடித் தீர்வு - அரச அதிபருக்கு நன்றி கூறிய சுரேந்திரன்


யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தி அதற்கு தீர்வாக யாழ்இ உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான அனுமதிகளை அதிகரிக்குமாறு கோரியமைக்கு அமைவாக உடனடியாக அதற்கான தீர்வாக யாழ்ப்பாண மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளரின் அத்தாட்சிப்படுத்தலுடன் வரும் விவசாய உற்பத்திகளை வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் வியாபாரிகளுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்க தீர்மானித்துள்ளமைக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளருக்கு  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி  நன்றி தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலருக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

நேற்றய தினம் (17-04-2020) யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தி அதற்கு தீர்வாக நுகர்ச்சிக்கு மேலதிகமான  யாழ்இ உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான அனுமதிகளை அதிகரிக்குமாறு கோரி மின்னஞ்சல் ஊடாக நான் அனுப்பிவைத்த கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து தீர்வு வழங்கியமைக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்  கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கு எனது கட்சி சார்பாகவும் யாழ். மாவட்ட மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறித்த கோரிக்கையை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்ததன்  பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது இந்த விடயத்தில் அவர் கொண்டுள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்ததுடன் அதற்கான உடனடித் தீர்வாக யாழ்ப்பாண மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளரின் அத்தாட்சிப்படுத்தலுடன் வரும் வியாபாரிகளுக்கு விவாசாய உற்பத்திகளை சரியான பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றி வெளிமாவட்டங்களுக்கு எடுத்துச்செல்வதற்கான அனுமதியை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த தீர்மானம் தமது உற்பத்திகளை விற்பனைசெய்ய முடியாமல் வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நல்லதொரு தீர்வாக அமையும் என நம்புகின்றேன்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற யாழ்ப்பாண மாவட்ட மக்களின் நுகர்ச்சிக்கு மேலதிகமாகவுள்ள காற்கறிகள் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளை வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகள் உரிய சுகாதார முறையினை பின்பற்றி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து யாழ்ப்பாண மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளரின் சிபாரிசின் ஊடாக மாவட்ட செயலகத்தில் அனுமதிகளை பெற்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post