எட்டுப் பேருக்கும் கொரோனோ தொற்றியது எப்படி? உறுதியாக எதனையும் சொல்ல முடியாது - பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice எட்டுப் பேருக்கும் கொரோனோ தொற்றியது எப்படி? உறுதியாக எதனையும் சொல்ல முடியாது - பணிப்பாளர் தெரிவிப்பு - Yarl Voice

எட்டுப் பேருக்கும் கொரோனோ தொற்றியது எப்படி? உறுதியாக எதனையும் சொல்ல முடியாது - பணிப்பாளர் தெரிவிப்பு


பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனோ வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில் அவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்று தெளிவாக கூற முடியாதுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனாவில் இன்று காலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

யாழ்ப்பாணம் அரியாலையில் மதகுரு ஒருவரின் ஆராதனையில் பங்குபற்றினவர்கள் மற்றும் குறித்த மதகுருவோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் என பலரும் அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதில் குறித்த மதகுருவுடன் நேரடி தொடர்பைக் கொண்டிருந்ததாக 20 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு இந்த மாதம் 1 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதனையடுத்து எஞ்சியிரந்த 14 Nரும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.  இதனைத் தொடர்ந்து 11 நாட்களின் பின்னராக இந்த 14 பேருக்கும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த தொற்றானது எவ்வாறு வந்தது என்று தெளிவாக கூற முடியாவிட்டாலும். சில சமயங்களில் ஏப்பிரல் 1 ஆம் 3 ஆம் திகதி தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அந்தப் பகுதியில் இருந்ததன் காரணமாக அவர்களிடம் இருந்தும் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.

ஆகவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்ற பகுதிகளில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அங்குள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகளளுக்கு உட்படுத்தப்பட்டு முற்றாக தொற்று இல்லை என்ற பின்னர் தான் வெளியில் விடப்படுவார்கள் ஆகவே பொது மக்கள் இதுபற்றி பயம் கொள்ளத் தேவையில்லை.

குறிப்பாக குறிப்பிட்ட போதகரோடு மிக நெருங்கிய தொடர்புடையவர்கள் தான் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பபட்டு வருகின்றார்கள். அதே போல ஆராதனையில் பங்குபற்றியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்கும் தொற்று அடையாளப்படுத்தப்படவில்லை.

குறிப்பாக நெருங்கிய தொடர்பை பேணியவர்களை முதற்கட்டமாக தனிமைப்படுத்தியால் அவர்களுக்கே முதற்கட்டமாக தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கும். ஏனையவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவாக இருக்க வேண்டும். அதன் காரணமாக அவர்களுக்கான பரிசோதனையிலம் அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இருப்பினும் இதைத் தவறி யாராவது ஒருவருக்கெனும் தொற்று இருக்கலாம் என்ற சலனம் மக்களிடம் நிலவலாம். ஆந்த அச்சங்கள் புரணமாக எங்களால் போக்கிவிட முடியாது. அது மாத்திரமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஒருவரினூடாக இன்னொருவருக்கு வராது என்றும் கூறிவிட முடியாது.

தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் இரர்னுவத்தினரதும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினதும் கண்காணிப்பில் இருக்கிறது. அவற்றை பூரணமாக அவர்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். எவ்வாறு இந்த தொற்று ஏற்பட்டது என்று தெளிவாக கூறி விட முடியாது. குறிப்பிட்ட பாதிரியாருடன் தான் வந்ததா அல்லது அங்கு இருந்தவர்களினால் அதாவது இரண்டாம் தரப்பினர் ஊடாக வந்ததா என்று தெளிவாக கூறிவிட முடியாமல் உள்ளது.

கொரோனோ தொற்று உள்ள ஒருவர் அல்லது சந்தேகத்திற்கிடமானவர்களுடன் இருக்கின்ற போது ஒருவரோடு ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியை பேண வேண்டும். அல்லது தனிமைப்படுத்த வேண்டும். அவர்கள் ஒன்றாக போகின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் இல்லாமல் செய்ய வேண்டும்.

ஆகவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை இரானுவத்தினரும் சுகாதார பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர். ஆகையினால் என்னால் தெளிவாக இதுபற்றி கருத்த கூற முடியாவிட்டாலும் குறிப்பிட்ட 20 பேரும் குறித்த மதகுருவுடன் நெருக்கமாக அதிக தொடர்பை பேணியவர்கள் என்ற படியால் தனிமைப்படுத்து கண்காணிப்பில் வைத்திருந்தார்கள்.

ஆதில் ஏற்கனவே 6 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் ஏனைய 8 பேருக்கும் அதாவது நேற்று இணங்காணப்பட்டவர்களுக்கு எந்தவகையில் தொற்று ஏற்பட்டது என்று என்னால் தெளிவாக கூற முடியாது. ஆக அங்கு தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஊடாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்க கூடுமென்ற சந்தேகம் நிலவுகிறது.

ஆயினும் இவர்கள் அனைவரும் உண்மையில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்தபடியால் பிரச்சனையில்லை. ஆனால் தொற்றுக்குள்ளானவர் சூழலில் இருப்பரானால் பலருக்கு தொற்று ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

குறிப்பாக குறித்த பாதிரியாருடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்பபட்டனர். அதே போல ஏனையவர்களும் தனிமைப்படுத்தப்ட்டனர். ஆவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. இது பற்றி ஐயம் கொள்ளத் தேவையில்லை. ஆகவே இவ்வாறான முறைப்பாடுகள் இருப்பின் சரியான முறையில் அந்த தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படுமென எண்ணணுகின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post