முழங்காவில், பலாலியில் உள்ளவர்களுக்கு இன்றும் கொரோனோ பரிசோதனை - Yarl Voice முழங்காவில், பலாலியில் உள்ளவர்களுக்கு இன்றும் கொரோனோ பரிசோதனை - Yarl Voice

முழங்காவில், பலாலியில் உள்ளவர்களுக்கு இன்றும் கொரோனோ பரிசோதனை

பலாலி மற்றும் முழங்காவிலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனையவர்களுக்கு இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அதன் முடிவுகளும் இன்று வெளிவருமென எதிர்பார்ப்பதாகவும் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யுhழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்த 14 பேருக்கு நேற்று ஆய்வு கூடப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் 8 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல முழங்காவிலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 8 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நே;ற்று பரிசொதனையில் தொற்றுக்கு உள்ளானவர்கள் இன்று மேலதிக சிசிக்சைக்காக வெலிக்கந்தை வைத்தியசாலைக்கும் அதைத் தவிர சிலாபம் பகுதியிலே இருக்கின்ற இரணவில வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட இரக்கின்றார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 7 பேர் வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டிருக்கின்ற நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட 8 Nருடன் சேர்த்து மொத்தமாக 15 பேர் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆயினும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 7 பேரதும் உடல் நிலை தேறிவருவதாகவும் அவர்கள் விரைவில் வீடுகள் செல்க்க கூடியதாக இருப்பதாகவும் அங்கிருக்கும் வைத்தியசாலை தரப்பினர்கள் எங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

மேலும் முழங்காவிலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 பேரில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலைiயில் ஏனைய நான்கு பேருக்கும் இன்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதே போலவே பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் ஒருவருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் இன்று வெளிவருமென்றும் எதிர்பார்க்கிறோம். அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கிளல் உள்ளவர்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post