யாழில் உதவிகள் கிடைக்காதவர்கள் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் - அரச அதிபர் - Yarl Voice யாழில் உதவிகள் கிடைக்காதவர்கள் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் - அரச அதிபர் - Yarl Voice

யாழில் உதவிகள் கிடைக்காதவர்கள் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள் - அரச அதிபர்

யுhழ்ப்பாணத்தில் தொடர் ஊரடங்கு நடைமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் எவருக்கேனும் இதுவரையில் எந்தவித உதவிகளும் கிடைக்காவிட்டால் மாவட்டச் செயலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் கேட்டுள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் சில இடங்களில் சில மணி நேரங்களாவது ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற பொதிலும் யாழில் பத்து நாட்களுக்கு மேலாக ஊரடங்கு தளர்த்தப்படாமலே இருக்கின்றது.

இதனால் மாவட்டத்திலுள்ள மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காண உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டு தான் வருகின்றன. ஆயினும் இந்த உதவிகள் அனைவரையும் சென்றடையவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவ்வாறான நிலையில் ஊருடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்காது விட்டிருந்தால் உடனடியாக மாவட்டச் செயலகத்துடன் தொடர:பு கொள்ளுமாறு அரச அதிபர் கேட்டுள்ளார். அவ்வாறு தொடர:பு கொள்ளுமிடத்தே உடனடியாக உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post