வடக்கில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுவதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடான நிலைமை ஏற்பட்டுள்ளதுஇ அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.
எனவே அத்தியாவசியப் பொருட்களை வடபகுதிக்கு அனுப்பி வைக்கவும் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக வடக்கில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானதாகும். இதற்கான நடவடிக்கைகளை நாம் விமர்சிக்க முடியாது. ஆனால் வடக்கில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடான நிலைமை ஏற்பட்டுள்ளது. அன்றாடம் தொழில் செய்து வாழ்பவர்களும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களும் பட்டினியில் வாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மைசூர் பருப்பு உட்பட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரிசி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதேபோன்றே அத்தியாவசிய மருந்துப் பொருட்களையும் பெறமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே அத்தியாவசியப் பொருட்களையும் மருந்து வகைகளையும் வடபகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகள் தங்குதடையின்றி கிடைப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை அரசாங்கம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கில் உள்ளூராட்சி மன்றங்களின் மூலம் பொருட்களும் நிவாரணங்கள் வழங்கப்படுவதை போன்று வடக்குஇ கிழக்கிலும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அமைப்புக்கள் ஊடாக பொருட்களை வழங்குவதற்கான அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.
வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கொழும்பில் தங்கியிருந்தால் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமாயின் பொலிஸில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பதிவுகளும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு வடக்குஇ கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல விரும்பினால் இவ்வாறு பதிவு செய்ய முடியும். இவ்வாறு பதிவு செய்யப்படுபவர்கள் இரண்டு வாரம் தனிமைப்படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சொந்த இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அரசாங்கத்துக்கு இவ்விடயம் தொடர்பில் நாம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தும் அதற்கு ஏற்ப பதிவுகள் இடம்பெறுகின்றமை வரவேற்கத்தக்கமாகும். கொரோனா தொற்றுப் பரவாமால் தடுக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டிய அதேவேளை மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment