கொழும்பிலிருந்து யாழிற்கு தப்பி வந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர் - Yarl Voice கொழும்பிலிருந்து யாழிற்கு தப்பி வந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர் - Yarl Voice

கொழும்பிலிருந்து யாழிற்கு தப்பி வந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர்

கொரோனோ அபாய வலயமான கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு களவாக வந்த 7 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று காணரமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் சில மாவட்டங்களில் சில மணிநேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இன்னும் சில மாவட்டங்களில் தொடர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதே நேரம் சில இடங்கள் தற்பொதும் இடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு யாரும் உட்செல்லவோ அல்லது யாரும் வெளியேறவோ அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறான நிலையில் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்ல முடியாத நிலைமை இருக்கிறது.

ஆயினும் கொழும்பிலிருந்தோ அல்லது வேறு மாவட்டங்களில் இருந்தோ யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு வருவதற்கும் அதே போல யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமுதியை பயன்படுத்தி வருகின்ற வர்த்தகர்கள் பொருட்களை கொழும்பில் இருந்த அதிகாமாக யாழ்ப்பாணத்திற்கு ஏற்றி வருகின்றனர். அதே நேரம் கொழும்பில் கொரோனோ தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வாறான பாஸ் அனுமதி பெற்ற வாகனமொன்றில் அங்கிருந்த 7 பேர் தப்பி வந்துள்ளனர்.

இவ்வாறு கொழும்பில் இருந்த சிலர் தப்பி வந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து சுகாதாரத் திணைக்களத்தினால் ஆராய்ந்து வந்த நிலையில் அங்கிரந்து 7 பேர் தொடர்பான விபரங்களும் பெறப்பட்டுள்ளன. ஆகையினால் அபாய வலயத்திலிருந்து தப்பி வந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post