வடக்கு பாதுகாப்பாகத் தான் இருக்கின்றது எவரும் பொறுப்பின்றி நடந்தால் நிலைமை மோசமாகும் - மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் - Yarl Voice வடக்கு பாதுகாப்பாகத் தான் இருக்கின்றது எவரும் பொறுப்பின்றி நடந்தால் நிலைமை மோசமாகும் - மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் - Yarl Voice

வடக்கு பாதுகாப்பாகத் தான் இருக்கின்றது எவரும் பொறுப்பின்றி நடந்தால் நிலைமை மோசமாகும் - மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்

யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக வடமாகாணம் தற்போதுள்ள நிலையில் பாதுகாப்பாகவே உள்ளது. ஆனாலும் சுவிஸ் போத கரைபோல் ஒருவா் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டாலும் நிலமை மோசமாகும். அவ்வாறு நடக்காமல் பாா்த்துக் கொள்ளும் பொறுப்பு மக்களிடம் உள்ளது. அதனை மக்கள் சாியாக செய்யவேண்டும்.

மேற்கண்டவாறு சமுதாய மருத்துவ நிபுணா் முரளி வல்லிபுரநாதன் கூறியிருக்கின்றாா். ஊரடங்கு சட்டம் வடமாகாணத்தில் தளா்த்தப்பட்டிருக்கும் நிலையில் தற்போதுள்ள நிலமை குறித்து ஊடகவியலாளா்கள் கருத்து கேட்டபோதே அவா் மேற் கண்டவாறு கூறியுள்ளாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில்..

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கின் பிற மாவட்டங்களும் தற்போது பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில் அபாய வலயங்களி ல் இருந்து எமது மாவட்டங்களுக்குள் பொறுப்பில்லாம் எவராவது நுழைந்தால் நிலமை மோசமாவதை எவராலும் தடுக்க முடியாது. எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

அபாய வலயங்களில் இருந்து எவராவது வந்தால் அவா்கள் உறவினா்கள் நண்பா்கள் என்று பாராமல் உண்மையை சுகாதார பிாிவினருக்கு தொியப்படுத்தவேண்டும். ஒரு நபருடைய செயற்பாட்டினால் ஒரு சமூகம் பாதிக்கப்படும் நிலையே இன்றிருக்கின்றது. குறிப்பாக சுவிஸ் போதகாின் செயற்பாடு எமக்கு உதாரணமாக உள்ளது.

மேலும் ஊரடங்கு சட்டம் தளா்த்தப்பட்ட நிலையில் மக்கள் திருவிழாவுக்கு செல்வதுபோல் வீதிகளில் திாிவதை பாா்க்க முடிகின்றது. தேவையில்லாமல் எவரும் வெளியே நடமாடாதீா்கள். அலுவலகங்கள் வேலை தளங்களில் கட்டாயம் முக கவ ம் அணியுங்கள். சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள். அதுவே பாதுகாப்பாக நாங்கள் இருப்பதற்கு வழியாகும்.

ஊரடங்கு தளா்வு தொடா்பாக.

ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டபோது நோயாளா் எண்ணிக்கை அதிகாிக்கும். இதற்கு உலகில் பல நாடுகள் உதாரணமாக உள்ளன. அங்கெல்லாம் தளா்வின் பின்னா் நோயாளா் எண்ணிக்கை அதிகாித்தே இருக்கின்றது. அதே போல் இலங்கையில் ஊரடங்கு தளா்த்தப்பட்டமையால் நோயாளா் எண்ணிக்கை அதிகாிக்கலாம்.

ஆனால் எங்களுடைய நாட்டில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அது வெற்றியளித்தால் எங்களுடைய நாடு மற்ற நாடுகள் சந்தித்த அபாயத்தை சந்திக்காது தப்பிக்கலாம் என்றாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post