கடுமையான நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் அச்சமின்றி வந்து சிகிச்சை பெற வேண்டும் - சத்தியமூர்த்தி கோரிக்கை - Yarl Voice கடுமையான நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் அச்சமின்றி வந்து சிகிச்சை பெற வேண்டும் - சத்தியமூர்த்தி கோரிக்கை - Yarl Voice

கடுமையான நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகியவர்கள் அச்சமின்றி வந்து சிகிச்சை பெற வேண்டும் - சத்தியமூர்த்தி கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளாகியவர்கள் அச்சமின்றி கட்டாயம் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சைகளைப் பொற்றுக் கொள்ள வேண்டுமென வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று நோய் காணமாக பொது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டள்ளது. ஆனால் அச்சப்படாமல் மக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வைத்தியசாலையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக கடுமையான நோய்ப் பாதிப்புக்களாகியவர்கள் தாம் வைத்தியசாலைக்கு வந்தால் கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சுகின்றனர். ஆனால் அவ்வாறு அஞ்சத் தேவையில்லை. கொரோனோ தொற்றுக்குள்ளாகியவர்களுக்கு தனியான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆகவே அச்சமின்றி நோயாளிகள் வைத்தியசாலையில் வந்து கிசிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆகையினால் கடுமையான நோய்ப் பாதிப்புக்குள்ளானவர்கள் வைத்தியசாலைக்கு கட்டாயம் வர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post