தென்மராட்சியில் கசிப்பு உற்பத்தி இடங்கள் முற்றுகை - ஐந்து பேர் கைது - பொருட்களும் மீட்பு - Yarl Voice தென்மராட்சியில் கசிப்பு உற்பத்தி இடங்கள் முற்றுகை - ஐந்து பேர் கைது - பொருட்களும் மீட்பு - Yarl Voice

தென்மராட்சியில் கசிப்பு உற்பத்தி இடங்கள் முற்றுகை - ஐந்து பேர் கைது - பொருட்களும் மீட்பு

தென்மராட்சியில் சட்டத்துக்கு புறம்பான  கசிப்பு விற்பனை அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் நான்கு இடங்களில் 10 லீற்றர் கசிப்பும் 60 ஆயிரம் லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவற்றை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெருடாவில் மட்டுவில் மற்றும் சரசாலையில் நேற்றிரவு

யாழ்ப்பாணம் போதைத் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பெரும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மீட்கப்பட்ட 10 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 60 ஆயிரம் லீற்றர் கோடாவும் பொலிஸ் நிலைத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post