பிரதமர் மகிந்த விடுத்துள்ள அழைப்பை ஏற்று சந்திக்கத் தயாராகும் கூட்டமைப்பு எம்பிக்கள் - Yarl Voice பிரதமர் மகிந்த விடுத்துள்ள அழைப்பை ஏற்று சந்திக்கத் தயாராகும் கூட்டமைப்பு எம்பிக்கள் - Yarl Voice

பிரதமர் மகிந்த விடுத்துள்ள அழைப்பை ஏற்று சந்திக்கத் தயாராகும் கூட்டமைப்பு எம்பிக்கள்

இலங்கையின் கடந்த பாராளுமன்றத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் மகிந்த ராஐபக்ச அழைப்பொன்று விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையிலையே அதற்கு முன்னதாக பிரதமரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகைக்கு வருமாறு பிரதமர் அழைத்துள்ளார். இது தொடர்பான அழைப்பு அனைவருக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இக் கூடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post