மனிதநேய பண்புடன் சமூக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் - அருட்பணி ஜெக்குமார் - Yarl Voice மனிதநேய பண்புடன் சமூக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் - அருட்பணி ஜெக்குமார் - Yarl Voice

மனிதநேய பண்புடன் சமூக அக்கறை கொண்டு செயற்பட வேண்டும் - அருட்பணி ஜெக்குமார்

எரியும் திரிகளாக தீயாக தீபங்களாக எமக்காக இம் மண்ணில் வாழ்ந்து விதைக்கப்பட்டவர்களின் வரிசையில் வரும் வைத்தியர்கள்  தாதிகள் சுகாதாரத் துறையினர்  போன்று  சிவில் சமுகத்தினர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்  செயற்பட முடியாதா? என அருட்பணி                           கி.ஜெக்குமார் அடிகள் கேள்வியேழுப்பினார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி  செயலக விசேட செயற்குழு எல்லா மாவட்டங்களில் இயங்கும் சிறுவர் விடுதிகள்  முதியோர்  இல்லங்கள்  பெண்கள் இல்லங்கள்  புனர்வாழ்வு மையங்கள்  விசேடதேவையுடையோர் போன்றவற்ரை  இனம் காட்டியுள்ளனர். இன்று கிராம சேவையாளர்களால் இனம் காணப்படும் வறுமையில் உழைப்பின்றி வாழும் குடும்பங்கள் இவற்ரை இனம் கண்டு உதவி செய்யும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதா?

இத்தகையதொரு பணிக்கு தன்னார்வ மனித நேய அமைப்புக்கள்  சிவில் சமுகத்தினர் சேவைமனப்பான்மை கொண்டோர் தாராள மனங்கொண்ட நன்கொடையாளர்களை  ஒருங்கிணைத்து தகவல் சமுகத் தொடர்பு சாதனங்களுடாக  ஒருங்கிணைத்து பத்திரிகை நிறுவனங்களும் ஒன்றிணைந்து  ஏன் செயற்பட முடியாதுள்ளது?

இறுதியாக மீண்டும் சமுகநேயம்  சமுக சிந்தனை  குடும்ப நலன்  இவைபற்றி எந்த சிந்தனையுமில்லாமல் தேவையற்ற ஒன்று கூடல்கள்  கடவுளின் பெயரால் மத ஒன்று கூடல்கள்  பாதுகாப்புதுறை இல்லாதபோது ஒன்றாக  இருந்து கேளிக்கைகள் இவைகள் எல்லாம் மனிதநேயமற்ற எமது கொடிய  சுயநலன்களின் வெளிப்பாடுகள் பல மில்லியன் ஏழைத் தொழிலாளரை சுரண்டுவது  இலாபம் கருதி பதுக்குவது  போன்றவை  கொரோனாவை விட கொடிய வைரசாகும்  சழூகத்திற்கு  செய்யவேண்டிய கடமைகளை  சேவைகளை வளங்காமல் இருப்பது கொடிய வைரசுத்தனமே

கொரோனாவிற்கு பின்னைய காலம்  வித்தியாசமானதாக அமையவிருக்கின்றது என்பது பல சழூகவியலாளர்களின் எதிர்வு கூறலாகும் இப் புதிய  பரந்த சமுகத்தினுள்  சாதி இன  மத  பிராந்திய  வரையறைகளைக் கடந்த சுரண்டல்  ஏமாற்றல்  அற்ற மனிதநேயம் சமுகக் கருணை அர்ப்பணம் நிறைந்த சேவை போன்ற புதிய  புமியை  நோக்கிய தரிசனத்துடன் பயணிக் வேண்டும் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post