யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனோ பரிசோதனை ஆரம்பம் - நன்றி கூறும் பணிப்பாளர் - Yarl Voice யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனோ பரிசோதனை ஆரம்பம் - நன்றி கூறும் பணிப்பாளர் - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனோ பரிசோதனை ஆரம்பம் - நன்றி கூறும் பணிப்பாளர்

கொரோனோ வைரஸ் தொற்கு தொடர்பான பரிசொதனை யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை  யாழ்  பல்கலைகழக மருத்துவ பீடத்துடன் இணைந்து யாழ்ப்பாணத்தில்  கொரோனா COVID-19 ற்கான RT-PCR பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

 இந்த பரிசோதனையைத் தொடங்குவதற்கு முன்பு இக்குழு பல கூட்டங்களையும் முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது.
.
தற்போது ​ COVID - 19 தொற்று சந்தேகத்திற்கிடமான மற்றும் தொற்றுளளவர்களுடன் தொடர்பிலிருந்த நபர்கள்  பரிசோதித்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்கு பங்களிப்புக்கு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்






0/Post a Comment/Comments

Previous Post Next Post