அரியாலை கிழக்கு மணியந்தோட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice அரியாலை கிழக்கு மணியந்தோட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு - Yarl Voice

அரியாலை கிழக்கு மணியந்தோட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

தாயகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட தொழில் இன்மை காரணமாக பாதிக்கப்பட்டு உணவு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழஙகும் பணி எமது நிறுவனத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அதன் தொடர் நடவடிக்கையாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புலம்பெயர்  தமிழ் மக்களின் நிதி உதவியில் யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 105 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

தாயக மக்கள் மீது கரிசனை கொண்டு உதவிகளை வழங்கிய இலண்டன் தளிர்கள் அமைப்பினருக்கும் இலண்டன் வாழ் தமிழ் உறவுகளுக்கும் இந்த உதவியைப் பெற்றுத்தந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் தாயக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post