இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடைபெற்ற ஆராதனையில் பங்கேற்றவர்கள் யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ வவுனியா என வடக்கு மாகாணத்தில் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 17) வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்டத்தில் 8 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
அத்துடன்இ வெளிநாடுகளிலிருந்து திரும்பி வீடுகளில் சுயதனிமைப்படுதலுக்கு உள்படுத்த 6 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்பேற்ற 8 பேருக்கும் ஏனைய 6 பேருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
Post a Comment