கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக முஸ்லீம் மதத் தலைவைர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
அலரிமாளிகையில் பிரதமர் மகிந்த ராஐபச்வுடன் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் முஸ்லீம் மக்களின் பல பிரச்சனைகள் குறித்தும் முஸ்லீம் தலைவர்கள் எடுத்தக் கூறியுள்ளனர்.
குறிப்பாக கொரோனோவால் நாட்டில் உயிரிழந்தவர்களில் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டிருந்தன.
இதற்கு முஸ்லீம் சமூகத்தில் எதிர்ப்புக்கள் வலுத்திருந்தன. ஆயினும் முஸ்லீம்களின் எதிர்ப்புக்களை அரசாங்கம் தட்டிக் கழித்திருந்தது.
இந்த நிலையில் மீ்ண்டும் இந்த விடயம் குறித்து முஸ்லீம் தலைவர்கள் பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment