யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கான பாஸ் வழங்கலில் புதிய நடைமுறை - வர்த்தக சங்கம் அறிவிப்பு - Yarl Voice யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கான பாஸ் வழங்கலில் புதிய நடைமுறை - வர்த்தக சங்கம் அறிவிப்பு - Yarl Voice

யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கான பாஸ் வழங்கலில் புதிய நடைமுறை - வர்த்தக சங்கம் அறிவிப்பு



யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பொருட்களை எடுத்து வருகின்ற போதும் வெளி மாவட்டங்களிலிருந்து யாழ் மாவட்டத்திற்கு பொருட்களை எடுத்து வருபவர்களுக்கும் பாஸ் அனுமதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் வர்த்தக சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இவ்வாறு பாஸ் அனுமதியைப் பெற்றுக் கொள்கின்ற வர்த்தகர்கள் அதில் மாற்றங்கள் செய்யக் கூடாது என்றும் அந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தக் கூடாதென்றும் கோரியுள்ள யாழ்ப்பாண வர்த்தக சங்கம்; நடைமுறையை மீறிச் செயற்பட்டால் அனுமதி ரத்துச் செய்யப்படும் என்பதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுhழ்ப்பாணம் மானிப்பாய் வீதியிலுள்ள யாழ் வணிகர் கழக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வர்த்தக சங்கத்தின் உப தலைவர் ஆர்.nஐயசேகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

கொரோனோ தாக்கத்தால் நாடு மழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு உள்ளது. அத்தோடு இவ் ஊரடங்குச் சட்டம் சில இடங்களில் குறிப்பிட்ட சில மணிநேரங்களாவது தளர்த்தப்பட்டாலும் யாழ்ப்பாணத்தில் தளர்த்தப்படாமல் தொடர்ந்தும் நடைமுறையிலேயே உள்ளது. ஆகவே இந்த ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வருவதற்கு பாஸ் அனுமதி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதற்கமைய கடந்த சில நாட்களாக நடைமுறையிலுள்ள பாஸ் அனுமதியில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை அனைத்து வர்த்தகர்களும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. குறிப்பாக ஒரு மாதம் அனுமதி வழங்கக் கூடிய இந்த பாஸ் அனுமதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் சில நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது கொழும:பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்வதானால் செல்கின்றவர்கள் அந்தந்தப் பிரதேச செயலரிடம் அனுமதியைப் பெற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் விபரங்களைப் பதிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையை மாவட்டச் செயலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்த பின்னர் அங்கிருந்து அதனை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் கொரோனோ தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள் இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதாவது நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகிய அயற்சூழல்கள் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் பரிசோதனை செய்வதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆகையினால் அதியுச்ச சுகாதார நடைமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். பெறப்படும் அனுமதிகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அரசாங்கள் அறிவித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றியே செயற்பட வேண்டும். இந்த பாஸ் அனுமதியில் திருத்தமோ மாற்றமோ செய்யக் கூடாது. அவ்வாறு ஏதும் மாற்றம் செய்வதானால் அதனையும் படிமுறை அடிப்படையிலையே மேற்கொள்ள முடியும்.

குறிப்பாக கொழும்பிற்கு செல்வதற்கு தான் பாஸ் அனுமதி என்றால் கொழும்பிற்குத் தான் போ வேண்டும். அதனை விடுத்து வேறு இடத்திற்குச் செல்ல முடியாது. அதே போல வேறு ஏதும் இடங்களுக்குத் தான் செல்ல வேண்டுமென்றால் அந்த இடங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அந்த அனுமதிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஏ9 பிரதான வீதியையே பயன்படுத்த வேண்டுமென்றும் இரானுவத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நடைமுறைகளின் அடிப்படையில் செயற்படுவதே பொருத்தமானதாகவும். இதனை மீறி யாரும் செயற்பட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய நடைமுறைகளிற்கு மாறாகச் செயற்பட்டால் பாஸ் அனுமதி ரத்துச் செய்யப்படும் என்பதுடன் வர்த்தக சங்கமும் அதற்கு பொறுப்பெடுக்காது.

ஆகவே நடைமுறைகளையும் அறிவித்தல்களையும் பின்பற்றி வர்த்தகர்களும் வாகன உரிமையாளர்களும் செயற்பட வேண்டும். எனவே பொறுப்போடு நடந்து கொண்டு சுகாதார பிரிவினருக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக்; கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post