கொரோனோ வைரஸ் தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் அனுமுதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடிய சம்பவமொன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிலாபம் வைத்தியசாலையில் பரிசொதனை சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆயினுமு் நேற்று மாலை குறித்த நபர் வைத்திய சாலையில் இருந்த தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் நடாத்திய தேடுதலில் பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீண்டும் சீலாபம் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment