வடக்கில் பலரையும் இணைத்து கிராமிய மட்ட சுகாதார மேம்பாட்டு குழு அமைக்க நடவடிக்கை - Yarl Voice வடக்கில் பலரையும் இணைத்து கிராமிய மட்ட சுகாதார மேம்பாட்டு குழு அமைக்க நடவடிக்கை - Yarl Voice

வடக்கில் பலரையும் இணைத்து கிராமிய மட்ட சுகாதார மேம்பாட்டு குழு அமைக்க நடவடிக்கை

கிராம மட்டத்தில் செயற்படும் அரச உத்தியோகத்தர்களையும் கிராம மட்டத்தில் செயற்படும் கிராமியக் குழுக்களையும் இணைத்து கிராமிய மட்ட சுகாதார மேம்பாட்டு குழுவினை உருவாக்குவதற்கான சுற்று நிருபத்தை  வட மாகாண சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது

இந்த குழு மூலம் கொரோணா கட்டுப்பாட்டு தடுப்பு நடவடிக்கைகள் பொது மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் வீட்டு தோட்டத்தை ஊக்குவித்தல் வீட்டுத்தோட்ட பயிர்களை சந்தைப்படுத்தல்  கிராமத்தில் உள்ள கொரோணா தொற்றாளர்கள் சந்தேக நபர்கள் நுழையும் போது உரிய அதிகாரிகளுக்கு விரைந்து அறிக்கையிடல்

சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு  கிராம மட்டத்தில் கொரோணா விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்தல் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல்  போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவுதல் மலசலகூடம்  குடிநீர் வசதி இல்லாத குடும்பங்களுக்கு அவற்றை  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல்

பொது மக்களிடையே  சமூக இடைவெளி சவர்க்காரமிட்டு கை கழுவுதல் சரியான முறையில் முகக்கவசம் அணிதல் ஆகிய சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிராமிய மட்ட சுகநல மேம்பாட்டு குழு உருவாக்கப்படுகின்றது

மேற் பார்வையாளர்களாக பிரதேச செயலர் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் செயற்படுவர்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட அரச அதிகாரிகளுக்கும் வடமாகாண சுகாதார திணைக்களத்தால் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post