இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற கொரோனோவால் 178 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகவே இந்த நோயைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஆகவே அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனில் nஐயசிங்க கோரியுள்ளார்.
குறிப்பாக நோய் தொற்றிலிருந்து விடுபடுவதற்கும் நோயைக் கட்டுப்படுத்தவதற்கும் நோய் குறித்தான சரியான தகவல்களை வழங்க வேண்டும். ஆனால் நோயத் தாக்கத்திற்கு உள்ளான சிலர் உண்மையான தகவல்களை வழங்க மறுத்து வருகின்றனர்.
இவ்வாறு உண்மைகளை மறைப்படு அல்லது பொய்களைக் கூறுவது பாரிய விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகவே ஒவ்வொரு பொது மக்கனும் இந்த ஆபத்துக்களை உணர்ந்து அனைவரையும் பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென்றும் கேட்டக் கொண்டார்.

Post a Comment