கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் நேற்று மாலை 6 மணி வரை ஊடரங்கு சட்டத்தை மீறிய 15 ஆயிரத்து 273 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மூவாயிரத்து 855 வாகங்களையும் காவற்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர். இதேவேளை தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா கொழும்பு களுத்துரை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.
இதனையடுத்து அன்றைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற மாவட்டங்களுக்கு பிற்பகல் 4 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment