தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் - Yarl Voice தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல் - Yarl Voice

தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்குதல்


யாழ். சித்தங்கேணி பகுதியில் குடி தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர்
ஒருவரை வட்டுகோட்டை பொலிஸார் மறித்து அவரது தண்ணீர் போத்தலை (கேன்)  கால் உதைந்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் இன்று நண்பகல் சித்தங்கேணி சந்திப் பகுதியில்
இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் தண்ணீர் எடுப்பதற்கு முகக் கவசம் அணிந்தவாறு சித்தங்கேணி பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதன்போது சித்தங்கேணி சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார் இருவர் அவரை மறித்து விசாரித்துள்ளனர்.

அதன்பின்னர், 'நாங்கள் மூன்று மாதம் தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம் உனக்கு எதுக்கு தண்ணீர் என கேவலமான தூசன வார்த்தைகளில் அவரை நோக்கி பேசியுள்ளனர். இதன்போது வேறு பலரும் அவ் வீதியால் பலரும் சென்று வந்துள்ளனர்.

அதன்பின்னர் அவர் திரும்பிச் செல்ல முற்பட்ட போது, அவர் கொண்டுவந்த
தண்ணீர் போத்தலை(கேன்) காலால் உதைந்து வீழ்த்தி அவர் மீது தாக்குதல்
நடத்தியுள்ளனர்.

இதன்பின்னர் பொலிஸார் உதைந்த தண்ணீர் (கேனை) போத்தலை எடுத்துக் கொண்டு தண்ணீர் எடுக்காது அவர் திரும்பிச் சென்றார்.

இதேவேளை மது போதையில் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி
காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post