நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது - தேர்தலை நடத்துவதே அரசின் நோக்கம் - ஐனாதிபதி அறிவிப்பு - Yarl Voice நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது - தேர்தலை நடத்துவதே அரசின் நோக்கம் - ஐனாதிபதி அறிவிப்பு - Yarl Voice

நாடாளுமன்றம் கூட்டப்பட மாட்டாது - தேர்தலை நடத்துவதே அரசின் நோக்கம் - ஐனாதிபதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை என்றும் அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும் நாடாளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் மற்றும் சஜித் பிரேமதாச தரப்பினருடன் இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பேசிய அவர் வெகு விரைவில் தேர்தலை நடத்துவதே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 'நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் நாட்டில் அவசர சட்டமொன்றை உருவாக்கிக்கொள்வது தவிர்ந்து வேறு எக்காரணம் கொண்டும் நாடாளுமன்றத்தை கூட்ட முடியாது.

அரசியல் அமைப்பில் அதற்கான இடமில்லை. அவரச நிலைமையை பிரகடனப்படுத்த எந்த நோக்கமும் எனக்கில்லை. தற்போது நாட்டில் ஒரு நெருக்கடி நிலைமை உருவாக்கியிருக்கின்ற காரணத்தினால் நாடாளுமன்ற தேர்தலை நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு என்னிடம் தெளிவுபடுத்தியுள்ளது.

இப்போது தேர்தலை நடத்த முடியாது ஆகவே முதலில் மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதில் உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பை நான் எதிர்பார்த்துள்ளேன்.

ஆகவே தேர்தல் ஒன்றினை நடத்தக் கூடிய சூழலை உருவாக்கி வெகு விரைவில் தேர்தலை நடத்தவே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆகவே அதற்கிடையில் நாடாளுமன்றம் கூட்டப்படாது' என ஜனாதிபதி தெட்டத் தெளிவாக அறிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post