ஊரடங்கு தளர்வின் போது வர்த்தகர்களுக்காக வர்த்தக சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - ஜெயசேகரம் - Yarl Voice ஊரடங்கு தளர்வின் போது வர்த்தகர்களுக்காக வர்த்தக சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - ஜெயசேகரம் - Yarl Voice

ஊரடங்கு தளர்வின் போது வர்த்தகர்களுக்காக வர்த்தக சங்கம் எடுத்துள்ள நடவடிக்கை - ஜெயசேகரம்

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளா்த்தப்படும்போது யாழ்.வணிகா் கழகத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கும் வா்த்தகா்கள் நடமாட்டத்தை இலகுபடுத்தவும் வா்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் யாழ்.வணிகா் கழகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக கழகத்தின் உப தலைவா் இ.ஜெயசேகரம் கூறியுள்ளாா்.

இது குறித்து மேலும் அவா் கூறுகையில்.. ஊரடங்கு தளா்த்தப்படும் பகுதிகளில் அடையாள அட்டை இறுதி இலக்கத்தின் அ டிப்படையிலேயே வெளியில் நடமாட அனுமதிக்கப் போவதாக கூறியிருக்கின்றது. இந்நிலையில் வணிகா் கழகத்தில் உறுப்புாிமை பெற்ற வா்த்தகா்களின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடமாட்டத்தை இலகுபடுத்துவதற்காக

யாழ்.பிரதேச செயலகம் மற்றும் யாழ்.பொலிஸாருடன் பேச்சுவாா்த்தை நடாத்தப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் எ மது உறுப்பினா்களான வா்தகா்களுக்கு வணிகா் கழகம் ஊடாக அனுமதி கடிதங்களை வழங்கவுள்ளோம். அந்த கடிதத்தி ன் அடிப்படையில் வா்த்தகா்கள் தமது வியாபார நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளலாம்.

அதேபோல் வா்த்தகா்கள் தமது வா்த்தக நிலையங்களில் வேலை செய்பவா்களுக்கு தமது வா்த்தக நிலையத்தின் கடித த லைப்பில் அனுமதி கடிதங்களை வழங்கவேண்டும். அல்லது வா்த்தக நிலையத்தின் பெயாில் அடையாள அட்டைகளை வ ழங்கவேண்டும். அதன் மூலம் வா்த்தக நிலையங்களில் வேலை செய்பவா்கள் தமது செயற்பாட்டை செய்யலாம்.

சகல அனுமதி கடிதங்களிலும் பெயா்இ விலாசம்இ அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் இடம்பெற்றிருக்கவேண்டும். மே லும் யாழ்.பிரதேச செயலகமும்இ பொலிஸாரும் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனா். இதற்கு வணிகா் க ழகமும் இணங்கியிருக்கின்றது. இதன்படி சகல வா்த்தக நிலையங்களிலும் கட்டாயம் கை கழுவும் ஒழுங்குஇ

அல்லது கிருமி நீக்கும் திரவம் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மேலும் வா்த்தக நிலையங்களில் வேலையாட்கள்இ மற்றும் மக்கள் குறைந்தளவில் இருக்கவேண்டும். மேலும் சமூக இடைவெளி மிக இறுக்கமானமுறையில் பின்பற்றப்படவேண்டும். தவறும் வா்த்தகா்கள் மீது எந்த தயவு தாட்சண்யமும் இல்லாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த அனுமதி கடிதங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படகூடாது. அவ்வாறு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்ப ட்டால் அந்த வா்த்தகா்களுக்கு வழங்கப்பட்ட சகல அனுமதியும் இரத்து செய்யப்படுவதுடன்இ வா்த்தக நடவடிக்கையில் ஈடு படுவது சிரமமாகும். எனவே வா்த்தகா்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என அவா் மேலும் கூறினாா்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post