கொரோனோ தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. அதே போல வேறு பாடசாலைகளிலும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
ஆனால் மக்கள் செறிவாக வாழும் குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறான தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயமாகவே இருக்கின்றது.
மக்களது எதிர்ப்புக்களை மீறி இவ்வாறான நிலையங்களை அந்தப் பகுதிகளில் அமைப்பதானது ஒரு சர்வாதிகாரச் செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஆகையினால் மக்களைப் பாதிக்கின்ற இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் மக்கள் செறிவாக வாழுகின்ற பகுதிகளில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
ஆகவே மன உளைச்சலை ஏற்படுத்துகின்ற இவ்வாறான தொடர்ந்தும் மேற்கொள்ளாது உடனடியாக அவற்றை அரசாங்கம் நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
Post a Comment