கோட்டபாயவிற்கு கொரோனோ தொற்று என முகநூலில் பதிவிட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி - Yarl Voice கோட்டபாயவிற்கு கொரோனோ தொற்று என முகநூலில் பதிவிட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி - Yarl Voice

கோட்டபாயவிற்கு கொரோனோ தொற்று என முகநூலில் பதிவிட்ட ஆசிரியருக்கு நேர்ந்த கதி

இலங்கை ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்சவிற்கு கொரோனோ தொற்று என சமூகவலைத்தளமான போஸ்புக்கில் பதிவிட்ட ஆசிரியர் வைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற பொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றில் 178 பேர் இலங்கையில் இணங்காப்பட்டுள்ளதுடன் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் கொரோனோ தொடர்பில் பொய்ச் செய்திகளை ஊடகங்களிலொ அல்லது பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களிலோ பரப்ப கூடாது என அரசு அறிவித்திருந்தது.

ஆயினும் கடந்த ஏப்பிரல் 1 முட்டாள் தினத்தின் ஐனாதிபதி கோட்டாபாயவிற்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள பாடசாலை ஒன்றின் நடன ஆசரியர் ஒருவர் தன்னுடைய முகப் புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தவிடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் குறித்த ஆசிரியரைக் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியரை கொழும:பு நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post