யாழில் கொரோனோ சந்தேக பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் கொரோனோ சந்தேக பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் கொரோனோ சந்தேக பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட பணிப்பாளர் சத்தியமூர்த்தி


கொரோனோ தொற்று சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்ட பத்து பேரில் ஆறு பேரிற்கு கொரோனோ தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனொ தொற்றுச் சந்தேகத்தில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பரிசொதனைகளின் அடிப்படையில் 39 பேர் கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

அதே நேரம் ஒருவருக்கு மட்டும் கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சந்தேகத்தில் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறாக தற்போது யாழ் போதனாவில் பத்துப் பேர் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ஆறு பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய நான்கு பேரிற்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை; முடிவுகள் நாளை வியாழக்கிழமை வெளிவருமென்றும் வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post