தென்மராட்சியின் சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் ஊடகவியலாளருமான ஞா.கிஷோரின் ஏற்பாட்டிலேயே குறித்த அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய செரண்டிப் சிறுவர் இல்லத்தினால் யாழ்மாவட்டம் முழுவதும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுவருகின்றது. அதனடிப்படையில் தென்மராட்சியின் சாவகச்சேரி நகரசபைக்கு உள்பட்ட
பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இவ் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை சாவகச்சேரி ஸ்ரீ பழனி ஆண்டவர் சிக்கன கடனுதவு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் வைத்து குடும்பம் ஒன்றுக்கு 2000 ரூபா பெறுமதியான பொதிகளே வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர்இ செரண்டிப் சிறுவர் இல்ல தலைவர் கந்தசாமி வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் தர்சன் மற்றும் செருக்கல் பிள்ளையார் ஆலய இந்து இளைஞர் மன்ற செயலாளர் ச.துவாரகன் ஆகியோர் இணைந்து மக்களுக்கான பொருட்களை வழங்கி வைத்தனர்.

Post a Comment