பலாலியில் தனிமைப்படுத்தபட்ட மக்களுக்கு உணவு பரிமாறிய இரானுவ சிப்பாய்க்கும் பரிசோதனை - Yarl Voice பலாலியில் தனிமைப்படுத்தபட்ட மக்களுக்கு உணவு பரிமாறிய இரானுவ சிப்பாய்க்கும் பரிசோதனை - Yarl Voice

பலாலியில் தனிமைப்படுத்தபட்ட மக்களுக்கு உணவு பரிமாறிய இரானுவ சிப்பாய்க்கும் பரிசோதனை


பலாலி இரானுவ முகாமில் தமிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறிய இரானுவச் சிப்பாய்க்கும் கொரோனோ தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் அரியாலையில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் மற்றும் போதகருடன் நேரடியாக தொடர்புகைளைக் கொண்டவர்கள் பலாலி இரர்னுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 20 பேரில் 14 பேருக்கு தற்பொது கொரோனோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டள்ளது. ஆகையினால் ஏனையவர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தநிலையில் அவர்களுக்கு உணவு பரிமாறிய இரானுவச் சிப்பாய்க்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post