யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து வருவதற்காக வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி பிற பொருட்களை எடுத்து வரும் பார ஊர்திகளின் வழித்தட அனுமதி உடனடியாக இரத்துச் செய்யப்படுவதோடு எடுத்துவரும் பொருட்களும் விற்பனைக்கு தடை செய்யப்படும் என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் விபரம் தெரிவிக்கையில் ...
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஊரடங்குவேளையிலும் தடையின்றி எடுத்து வருவதற்காக பல சிரமத்தின் மத்தியிலும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி பிற பொருட்களை சிலர் எடுத்து வருவதாக எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இவ்வாறான பார ஊர்திகளின் வழித்தட அனுமதி உடனடியாக இரத்துச் செய்யவும் அவ்வாறு எடுத்துவரும் பொருட்களும் விற்பனைக்கு தடை விதிக்கவும் எண்ணியுள்ளோம்.
இதேநேரம் இவ்வாறு எடுத்து வந்த பார ஊர்திகளின் விபரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டு அனைத்து பொருட்களையும் முடக்கப்படும் . இதேநேரம் தற்போது ஆனையிறவு மற்றும் பூநகரிப் பகுதியில் கோரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினையே படையினர் மேற்கொள்ளும் நிலமையில் பின்னர் ஏற்றி வரும் பொருட்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் இக்கட்டு நிலமைக்குள் தள்ளப்படும் சந்தர்ப்பமும் உண்டு.
இதனால் வர்த்தகர்களோ பார ஊர்தி சாரதிகளோ குறித்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். தவறினால் தடை செய்யப்படும் . எனத் தெரிவித்தார்.-
Post a Comment