யாழ் பல்கலைக் கழகத்தில் கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு - Yarl Voice யாழ் பல்கலைக் கழகத்தில் கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு - Yarl Voice

யாழ் பல்கலைக் கழகத்தில் கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்னும் கிருமித் தொற்று நீக்கல் நடவடிக்கை இரானுவத்தால் முன்னெடுக்கப்பட்டது.

கொரோனோ வைரஸ் தாக்கத் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பல இடங்களிலும் கிருமித் தொற்று நீக்கல் மருந்து விசுறும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்மைய யாழ் மாவட்டத்திலும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள் அரச அலுவலகங்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் பல்கலைக்கழகத்திலும் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களிலும் பல்கலை;கழக வளாகத்தைச் சுற்றியுள்ள பிரதேசஙக்ளிலும் கிருமித் தொற்று நீக்கல் மருந்து விசிறும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.'

0/Post a Comment/Comments

Previous Post Next Post