பருத்திதுறை வைத்திய அத்தியட்சகர் உடன் இடமாற்றம் - புதியவர் நியமனம் - பேராட்டம் நிறுத்தம் - Yarl Voice பருத்திதுறை வைத்திய அத்தியட்சகர் உடன் இடமாற்றம் - புதியவர் நியமனம் - பேராட்டம் நிறுத்தம் - Yarl Voice

பருத்திதுறை வைத்திய அத்தியட்சகர் உடன் இடமாற்றம் - புதியவர் நியமனம் - பேராட்டம் நிறுத்தம்

கொரோனோ வைரஸ் தொற்று சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுத்து வந்த பருத்தித்துறை ஆதரார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் மீதான விசாரணைக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்திதுறை ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றி வந்த வைத்தியர் குகதாசன் வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அங்கு கடமையாற்றும் வைத்தியர்களால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்மைகய குறித்த வைத்திய அத்தியட்சகரை உடனடியாக இடமாற்றி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையிலையே குகறித்த வைத்திய அத்தியட்சகர் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். ஆகையினால் அங்கு கடமையாற்றி வைத்தியர் கமலநாதன் தற்காலிக அத்தியட்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகளையடுத்து நாளை மன்னெடுக்கப்பட இருந்த போராட்டமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்த்தியர் காண்டிபன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post