யாழில் இன்று பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை - சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice யாழில் இன்று பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை - சத்தியமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

யாழில் இன்று பரிசோதிக்கப்பட்ட 17 பேருக்கும் கொரோனோ தொற்று இல்லை - சத்தியமூர்த்தி அறிவிப்பு

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று பரிசோதிக்கப்பட்ட எவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனோ சந்தேகத்தில் யாழ் போதனாவில் அனுமதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் சாவகச்சேரி சுகாதார சேவைகள் பணிமனைப் பரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 12 பேருக்கும் இன்று கொரோனோ பரிசொதனை யாழில் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 17 பேரில் ஒருவருக்கும் கொரோனோ தொற்று இல்லை என பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பணிப்பாளர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் மற்றும் தனிமைப்படுதலில் வைத்துள்ளவர்களுக்கும் பரிசொதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 7 பேருக்கு மாத்திரமே கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டடிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post