வெளியே வந்தால் கொரோனோ கொல்லும் - உள்ளே இருந்தால் வறுமை கொல்லும் - மக்களின் நிலை இதுவென சிவாஜிலிங்கம் ஆதங்கம் - Yarl Voice வெளியே வந்தால் கொரோனோ கொல்லும் - உள்ளே இருந்தால் வறுமை கொல்லும் - மக்களின் நிலை இதுவென சிவாஜிலிங்கம் ஆதங்கம் - Yarl Voice

வெளியே வந்தால் கொரோனோ கொல்லும் - உள்ளே இருந்தால் வறுமை கொல்லும் - மக்களின் நிலை இதுவென சிவாஜிலிங்கம் ஆதங்கம்

வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனோ கொல்லும் என்பது போன்றே வீட்டிற்குள் இருந்தால் வறுமை கொல்லும் என்ற நிலைமையே தற்போது ஏற்பட்டிருப்பதாக் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி உதவியை வழங்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

ஆகையினால் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 3000 ருபா என்ற அடிப்படையில் இரண்டு மாதத்திற்கு அவரவர் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி உதவியை அரசாங்கம் வழங்க வேண்டுமென்று கோரியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

நவீன துட்டைகைமுனு பொன்றொ ஐனாதிபதி செயற்படுகின்றார். அவர் துட்டகைமுனு முன்பாக பதவிப்பிரமானம் செய்திருந்த நிலையில் தற்பொது துட்டகைமுனுவாகவே தன்னுடைய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றார்.

அவ்வாறு அவர் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளின் தொடராக பௌத்த மத பீடங்களை அழைத்து ஆலோசனை நடாத்தி முப்படைகளையும் கொண்டு தனது ஆட்சியை கொண்டு செல்கிறார். அரசியலமைப்பு விவகாரம் குறித்து பௌத்த மதபீடங்களுடன் பேசிவிட்டு தீர்மானங்களையும் எடுக்கின்றார்.

நாட்டில் பேரிடராக கொரோனோ தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த தாக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற அதே வேளையில் மக்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு படையினர் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் இந்தப் பாதிப்பு இன்று அதிகரித்து வருகின்றது.

படையிரைக் கொண்டு கொரோனாவைக் கட்டப்படுத்த நடவடிக்கை எடப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று கnhரோனோ காவிகளாக படையினரே மாறியிரக்கின்றனர். இதனால் படையினரைக் கண்டாலே பொது மக்கள் அச்சப்படுகின்ற நிலைமை உள்ளது.

குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் முதல் வேறு தொழில்களுக்குச் சென்றவர்கள் வேறு தேவைகளின் அடிப்படையில் வெளி மாவட்டங்களுக்குச் சென்ற பலர் அரசின் ஊரடங்கள் மீண்டும் தமது மாவட்டங்களுக்கு வர முடியாமல் அவதிப்பட்டனர். ஆனால் படையினருக்கு அவ்வாறு இல்லாமல் விடுமுறைகளும் வழங்கப்பட்டது. அது இன்றைக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் தற்பொது தான் விடுமறைகளை இரத்தச் செய்கின்றனர்.

இவ்வாறான நிலைமைகள் இருக்கத்தக்கதாக மக்கள் பல்வெறு பாதிப்புக்களை இன்று எதிர்நொக்கி வருகின்றனர். குறிப்பாக சொல்வதானால் வெளியே வந்தால் கொரோனோ கொல்லும் வீட்டிற்குள்ளேயே இருந்தால் வறுமை கொல்லும் என்ற நிலைமை வந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்பொது அரசாங்கம் 5000 ருபாவை கொடப்பனவாக வழங்கியிருக்கிறது. இது போதுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆகவே குடும்பத்திலுள்ள ஒரு உறுப்பினருக்கு மூவாயிரம் என்ற அடிப்படையில் குடம்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இரண்டு மாதத்திற்கான கொடுப்பனவை அரசாங்கம் வழங்க வேண்டும்.

தற்போது மிக மோசமான நிலையில் நாங்கள் பயணிக்கின்ற நிலைமையில் புலம் பெயர் தேசங்கள் உள்ள உறவுகளினதும் உள்ளுரிலும் உள்ள கொடையாளர்களினதும் உதவிகளினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த உதவிகள் பொதுமானதாக இல்லை.

ஆகையினால் பாதிக்கப்பட்ட மக்களை அப் பாதிப்புக்களிலிருந்து மீட்டெடுப்பதற்கும் பஞ்சம் பட்டினியிலிருந்து தப்புவதற்கும் அரசாங்கம் அவர்களுக்கு உதவியை வழங்க வேண்டுமென்று கோருகின்றோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post