யாழில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்குபற்றியிருந்த போதும் மறைந்திருந்த குடும்பம் - Yarl Voice யாழில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்குபற்றியிருந்த போதும் மறைந்திருந்த குடும்பம் - Yarl Voice

யாழில் சுவிஸ் போதகரின் ஆராதனையில் பங்குபற்றியிருந்த போதும் மறைந்திருந்த குடும்பம்

யாழ்ப்பாணம் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டு உண்மையை வெளிப்படுத்தாதாமல் மறைந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்த சிலருக்கு கொரோனோ அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் கலந்த கொண்டவர்கள் தம்மை அடையாளப்படுத்த வேண்டுமென சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது.

இதற்கமைய பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போதும் அதனை வெளிப்படுத்தாமல் மறைந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் வட்டுக் கோட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மறைந்திருந்த குறித்த குடும்பத்தினர் சுகாதார பிணமணையின் அறிவுறுத்தலுக்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வேசைகள் திணைக்கள வடபிராந்திய பணிப்பாளர் ஆ.கெதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post