இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தகவல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன் மணி (வயது 36)என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த குடும்பத் தலைவர் இனுவில் பகுதியில் தங்கி இருந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு தலையில் கட்டி உள்ளதாக கூறி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

Post a Comment