வெளி மாவட்டங்களுக்கான பாஸ் அனுமதியை இறுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து என மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இன்று ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரியும் ஊரடங்கு நேரத்தில் மாவட்ட எல்லைகளினை தாண்டி பயணிக்க 300 மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளில் சான்றிதழ்களை வழங்குகிறது.
அவை அத்தியாவசிய சேவைகளுக்குரித்தான அரசாங்க உத்தியோகத்தர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக கூறுபவர்கள்.
யாழ்ப்பாணத்தில் மொத்தம் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு ( ஆழுர் )மொத்தம் 3000 மேற்பட்டோர் இவ்வாறு மாவட்ட எல்லையை கடக்க அனுமதிக்கப்படுகின்றது.
சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2000 நபர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் இப்போது பிரதேச செயலகத்தின் கடிதம் காரணமாக சுகாதார வைத்திய அதிகாரிகளினால் ஆழுர் சான்றிதழை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் சரியானை முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.
அரச அதிபர் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் இருவரும் இணைந்து இதனை கட்டுப்படுத்த தேவையான ஒழுங்குமுறையை ஏற்படுத்த வேண்டும்.
கொளரவ ஆளுநர் அவர்கள் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தரப்பினரை இது சம்பந்தமாக இறுக்கமான விதிமுறைகளை அமுல்படுத்துவதனை உறுதிப்படுத்த வேண்டும் என்று வினயமாக கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு கட்டுப்படுத்தாதவிடத்து ஊரடங்கு உத்தரவு பயனற்றது என்பதனையும் இவ்வாறான கட்டுப்பாடின்றி அனைத்து மக்களையும் (அத்தியாவசிய சேவைகள் நீங்கலாக) மாவட்ட எல்லைகளை தாண்ட அனுமதிப்பது கொரோனா பரவுவதனை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
வடமாகாண இணைப்பாளர் வைத்தியர் த.காண்டீபன் தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment